முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹவாயில் வெடித்த எரிமலை பசிபிக் கடலில் கலந்தது

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      உலகம்
Image Unavailable

ஹவாய்: ஹவாய் தீவில் உள்ள எரிமலை வெடித்து தற்போது பசிபிக் பெருங்கடலில் கலந்துள்ளது. கடலில் மிகவும் அதிக அளவில் லாவா குழம்புகள் கலந்துள்ளது.

அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் உள்ள எரிமலை கடந்த இரண்டு வாரமாக வெடித்து நெருப்பை கக்கிக் கொண்டுள்ளது. நேற்று முன்தினம் மூன்றாவது முறையாக வெடித்தது. இது மொத்தமாக வெடித்த காரணத்தால் மக்கள் அவர்கள் இருந்த பகுதியை விட்டு வெளியேறினார்கள். இதற்காக அமெரிக்க அரசு மீட்பு படையை அனுப்பி இருந்தது.

கடந்த இரண்டு வருடமாக மாறி மாறி வெடித்துக் கொண்டு இருந்த இந்த எரிமலை தற்போது மீண்டும் லாவா குழம்புகளை கக்கிக் கொண்டு வருகிறது. இன்னும் பல்லாயிர கணக்கான மக்கள் மீட்கப்பட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

பசுபிக் கடலில் ஓரம் இருக்கும் இந்த எரிமலை வெடித்ததால், முதல்முறையாக தற்போது எரிமலை கடலுக்குள்ளும் கலந்துள்ளது. பெரிய அளவில், கடலில் நடுப்பகுதி வரை இந்த எரிமலை கலந்து உள்ளது. இதனால் வெறும் நெருப்புக் குளம்புகள் மட்டுமில்லாமல், வெடித்து சிதறிய பாறை துண்டுகளும் கடலில் கலந்துள்ளது. இது கடல் பகுதியை மொத்தமாக மாசுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் தீயணைப்பு படைவீரர்கள் குழம்பி வருகிறார்கள்.

இது இன்னொரு விதமான பாதிப்பையும் உருவாக்கியுள்ளது. இந்த நெருப்புக் குழம்புகள் நீரில் கலந்த உடன், பெரிய அளவில் நீர் ஆவியாகி உள்ளதால், அருகருகே நீராவி படலம் உருவாகி உள்ளது. இந்த நீராவி படலத்தில் மோசமான வாயுக்கள் இருப்பதாகவும், இதை சுவாசித்தால் பெரிய அளவில் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இருக்கும் மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து