முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது: அமித்ஷா கருத்து

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அமைந்ததாகவும், தோல்வியை வெற்றியாக சித்தரிக்க காங்கிரஸ் புதிய வழியைக் கண்டிபிடித்ததாகவும் பா.ஜ.க தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார்.

கர்நாடக அரசியல் நிலவரம் தொடர்பாக அமித்ஷா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். இதில் குழப்பம் எதுவும் இல்லை. எங்கள் கட்சி தனிப்பெரும் கட்சியாக 104 இடங்களில் வெற்றி பெற்று உருவெடுத்த நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோராமல் இருந்திருந்தால் கர்நாடக மக்களின் தீர்ப்புக்கு எதிரானதாக ஆகியிருக்கும்.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் தோல்வியை வெற்றியாக சித்தரிப்பதற்காக, புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளது. பெரும்பாலான அமைச்சர்கள் தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும், தங்கள் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

இப்போது காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் மட்டுமே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. தேர்தல் ஆணையம், சுப்ரீ்ம் கோர்ட் உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாட்டை காங்கிரஸ் கட்சி சமீபகாலமாக குறை கூறி வந்தது. கர்நாடக தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சி அமைக்க முடியாமல் போன நிலையிலும், சுப்ரீம் கோர்ட், தேர்தல் ஆணையம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது காங்கிரஸ் கட்சி இப்போது நம்பிக்கை வைக்க தொடங்கி உள்ளது. இது தொடரும் என நம்புகிறேன். இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து