முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: பெண் பத்திரிகையாளரை அவதூறாக விமரிசித்து முகநூலில் கருத்து பதிவிட்டது தொடர்பான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும், நிறுவனங்களில் பணி புரிவது குறித்தும் மிகவும் தரக்குறைவான கருத்தை பா.ஜ.க பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து கைதாகாமல் இருக்க எஸ்.வி.சேகர் தலைமறைவானதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக எஸ்.வி.சேகர் தரப்பில் முன் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது ஐகோர்ட்.

இந்நிலையில் முன் ஜாமீன் கோரி, எஸ்.வி.சேகர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நேற்று, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

எஸ்.வி. சேகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முகநூல் பதிவு தொடர்பாக எஸ்.வி. சேகர் மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் எஸ்.வி.சேகரை, ஜூன் 1-ம் தேதி வரை தமிழக காவல்துறையினர் கைது செய்ய தடை விதித்தனர். மேலும் இதுதொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து