முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 5 விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கான பணிகள் இந்திய தொழில் கூட்டமைப்பு தகவல்

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் 5 விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய தொழில் கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்திய தொழில் கூட்டமைப் பின்  தெற்கு மண்டல நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து இந்திய தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டலத் தலைவர் ஆர்.தினேஷ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

கேள்வி:- தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு இருக்கிறதா? அது உங்களுக்கு திருப்திகரமாக இருக்கின்றதா? பதில்:- இப்போது, தொழில் வழிச் சாலைகள், சாலைகள், விமான போக்குவரத்து போன்றவற்றில் அரசால் செய்யப்பட்டுள்ள அர்ப்பணிப்பு தொடர்ந்தால் நிச்சயம் திருப்தி கிடைக்கும். விமான நிலையங்களுக்கு தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்திக் கொடுக்கிறது. 5 விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்காக இணைப்பு என்று பார்த்தால், துறைமுகங்கள், சாலைகள், ரெயில், விமானம் ஆகியவை உள்ளன.

இப்போது சென்னை மட்டுமல்லாமல், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலத்தில்கூட, இரவிலும் விமானங்களை இயக்கும் வசதிக்கு நாங்கள் பரிந்துரை செய்திருக்கின்றோம். அனைத்து வகையிலும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்திய தொழில் கூட்டமைப்பில் ஆலோசித்து, வழிவகுத்து கொடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து