முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கப்பலூர் டோல்கேட்டில் திறப்புவிழாவிற்கு காத்திருக்கும் கழிப்பறைகளால் வாகனங்களில் பயணிப்போர் அவதி!

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட் சர்வீஸ் சாலையோரத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் பலமாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது.இதனால் டோல்கேட் வழியே வாகனங்களில் செல்வோர் இயற்கை உபாதைகளை கழித்திட முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் நான்கு வழிச்சாலையில் டோல்கேட் செயல்பட்டு வருகிறது.இந்த டோல்கேட் நிர்வாகம் சாலைகளை முறையாக பராமரித்திடாமல் வாகனங்களுக்கு சுங்ககட்டணம் வசூல் செய்வதை மட்டுமே முக்கியமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.இதனிடையே நீதிமன்ற அறிவுரையின்படி நான்குவழிச்சாலையில் வாகனங்களில் பயணித்திடுவோருக்கு தேவையான சில அடிப்படை வசதிகளை கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் செய்து வருகிறது.இதன் ஒருபகுதியாக புதிய சாலை அமைத்திடும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கப்பலூர் டோல்கேட்டின் அருகே திருமங்கலம் செல்லும் சர்வீஸ் சாலையின் இருபறத்திலும் ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்து வதற்கான நவீன கழிப்பறையும் ரெடிமேட் கழிப்பறையும் புதிதாக கட்டப்பட்டள்ளது.
அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த கழிப்பறைகள் கட்டப்பட்டு பலமாதங்கள் ஆகியும் இன்றுவரை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படவில்லை.இதனால் நான்கு வழிச்சாலை வழியே வாகனங்களில் சென்றிடுவோர் தங்களது இயற்கை உபாதைகளை கழித்திட முடியாமல் தனியார் உணவகங்களைத் தேடி ஓடவேண்டிய நிலை உருவாகி யுள்ளது.இந்த கழிப்பறைகளை திறப்பதற்கு மத்திய வி.ஐ.பி. ஒருவரின் தேதி கிடைக்காமல் டேல்கேட் நிர்வாகம் காத்திருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கப்பலூர் டோல்கேட் கழிப்பறைகளின் திறப்புவிழா விற்கென்று விவிஐபி-க்களை தேடிக் கொண்டிருக்காமல் பொதுமக்களின் நலன் கருதி அதனை டோல்கேட் நிர்வாகம் உடனடியாக திறந்துவிட வேண்டும் என்பதே அனைவரது அவசரகால எதிர்பார்ப்பாக உள்ளது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து