முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் அருகே சங்குமால் கடற்கரைப்பகுதியில் பூங்கா அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு:மீன்பிடி உபகரணங்களுடன் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்:

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,: ராமேஸ்வரம் அருகே பாரம்பரியமாக மீன்பிடித்தொழிலுக்காக பயன்படுத்தி வந்த சங்குமால் கடற்கரைப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் பூங்கா அமைக்க எடுத்து வரும் நடவடிக்கைக்கு  எதிர்ப்பு தெரிவித்து மீன்பிடி தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நாட்டுப்படகு  மீனவர்கள் மீன்பிடி உபகரணங்களுடன் ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தை  நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
  ராமேஸ்வரம் அருகே சங்குமால்  கடற்கரைப்பகுதியில் பாரம்பரியமாக   100க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் பாய்மரம் படகு,நாட்டு படகு,கட்டுமரம் ஆகியவற்றில் மீன்பிடித்தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.அப்பகுதியில் மீன்வர்கள்  பிடித்து வரும் மீன்களை  உலர வைப்பது,சேதமான மீன்பிடி வலைகளை சீரமைப்பது போன்ற பணிகளை அப்பகுதியில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில்  சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் பூங்கா அமைக்கவும்,  அப்பகுதியிலுள்ள   மீனவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து ராமேசுவரம் பகுதியில் வசித்து வரும் சங்குமால், ஓலைக்குடா தண்ணீர்ஊற்று, மெய்யம்புளி உள்ளிட்ட 10 க்கும் மேற்ப்பட்ட  மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் ராமநாதபுரம்,ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளர்கள்  கூட்டமைப்பை சேர்ந்தவர்களும் ராமேஸ்வரம் பேரூந்துநிலையம் எதிரே   மீன்பிடி உபகரனங்களை தலையில் சுமந்து ஆர்பாட்டம் நடத்தினார்கள்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கருணா மூர்த்தி தலைமை வகித்தார்.  அதன் பின்னர் பின் பேரணியாகச்  தாலுகா அலுவலகம் சென்று  அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வட்டாச்சியர் சந்திரனிடம் பாரம்பரியமாக நாங்கள் பயன்படுத்திவரும் கடற்கரைபபகுதியில் பல நூறு மீனவக்குடும்பங்களின்  வாழ்வாதரத்தை அழித்து பூங்கா அமைக்கும் திட்டதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை முன்வைத்து மனுகொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினரா்கள்.அதன் பின்னர் வட்டாச்சியர் சந்திரன் மீனவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி    மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.அதன் பின்னர் அப்பகுதியிலிருந்து மீனவர்கள் கட்டு மர படகுகளை எடுத்துக்கொண்டு கலைந்து சொன்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து