முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்,- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில்  1427-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் .சிவஞானம் தலைமையில்    நடைபெற்றது.
 இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது:
 விருதுநகர் மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கான 1427-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)  16.05.2018 முதல் 25.05.2018 வரை  9 வட்டங்களில், 38 உள் வட்டங்கள் மற்றும் 600 வருவாய் கிராமங்களில் நடைபெற்று வருகிறது. வருவாய் தீர்வாயத்தின் போது கூடுதலாக மக்கள் தாங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு தேவையான மின் இணைப்பு வேண்டியும், விவசாய நிலத்தின் உடமைப் பட்டா, கிராம சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டும், பெயர் மாற்றம் செய்ய வேண்டியும் மனுக்கள் தரலாம். மேலும் தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற முறையிடலாம்.   நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த்துறையினரால் நிறைவேற்றப்படும்.

மேலும், சாத்தூர் வட்டத்தில் வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 16.05.18 முதல் 22.05.18 இன்று வரை நடைபெற்ற 1427-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)யில் பட்டா மாறுதல்(முழுப்புலம்) 100, பட்டா மாறுதல் (உட்பிரிவு) 64, நத்தம் சிட்டா பட்டா 1, கணினி சிட்;டா 04, கணினி திருத்தம் 17, அத்துமால் அளத்தல் 05, யு.டி.ஆர் தவறு 04, வீட்டுமனைப்பட்டா 63, இலவச மின்னணு குடும்ப அட்டை 2, நில ஆக்கிரமிப்பு 11, நகர நிலவரித்திட்டம் (முழுப்புலம்) 04, முதியோர் உதவித்தொகை 32, விவசாய நிலத்திற்கு வண்டல்மண் எடுப்பதற்கு அனுமதி வேண்டி 02, சான்றுகள் 24, நகல் மனு 01, இதர மனுக்கள் 13, பிற துறை சார்ந்த மனுக்கள் 22 என மொத்தம் 368 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும், 1 பயனாளிக்கு அத்துமால் அளத்தல் உத்தரவையும், 02 பயனாளிகளுக்கு வீட்டுமனை பெறுவதற்கான உத்தரவுகளையும், 09 பயனாளிகளுக்கு சான்றுகளையும், 01 பயனாளிக்கு நகல் மனுவையும், 02 பயனாளிகளுக்பட்டாக்களையும், 02 பயனாளிகளுக்கு கணினி சிட்டா நகல்களையும், 03 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளையும், இதர மனுக்களையும், 02 பயனாளிகளுக்கு நகர நிலவரித்திட்டம் (முழுப்புலம்) உத்தரவுகளையும் என மொத்தம் 37 பயனாளிகளுக்கு இதுவரை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 331 மனுக்களில் 42 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, பிறகு மனுக்கள் அனைத்தும் பரீசிலனையில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய்   கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.  மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.
 எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  .அ.சிவஞானம்,  தெரிவித்தார்    
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) செந்தில்குமாரி,  ; உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து