முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர் முகமது

புதன்கிழமை, 23 மே 2018      உலகம்
Image Unavailable

கோலாலம்பூர், மலேசிய அமைச்சரவையில் எம். குலசேகரன் என்ற தமிழருக்கு இடம் கிடைத்துள்ளது. இதைப் போலவே மலேசிய நாட்டின் முதல் சீக்கிய அமைச்சராகிறார் கோவிந்த் சிங் தியோ என்ற வழக்கறிஞர்.

மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மகாதிர் முகமது பிரதமரானார். இந்த நிலையில் தனது அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோவிந்த் சிங் தியோவைச் சேர்த்துள்ளார். வழக்கறிஞரான கோவிந்த் சிங் தியோ, மகாதிர் முகமதுவின் அமைச்சரவையில் இணைந்துள்ளதன் மூலம் மலேசியாவில் அமைச்சரான முதல் சீக்கியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தியோவுக்கு தொடர்பு மற்றும் மல்ட்டிமீடியா துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இவர் முதன்முறையாக மலேசிய நாடாளுமன்றத்துக்கு 2008-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றி கண்டார். தற்போது 3-வது முறையாக புசோங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார். இவரது தந்தை கர்பால் சிங்கும் அரசியல்வாதிதான். அதைப் போலவே ஐனநாயக போராட்டக் கட்சியை (டிஏபி) சேர்ந்த தமிழர் எம்.குலசேகரன் என்பவருக்கு அமைச்சர் பதவியை மகாதிர் முகமது கொடுத்துள்ளார்.

அவருக்கு மனித வள ஆதாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 61 வயதாகும் குலசேகரன் ஜனநாயக போராட்டக் கட்சியின் தேசிய துணைத் தலைவராக உள்ளார். இவரது தந்தை ரப்பர் தோட்டத் தொழிலாளி. ஈப்போ தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார் குலசேகரன். இந்தத் தொகுதி சீனர்கள் அதிகம் வாழும் தொகுதியாகும். 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் இருவரும் பிரதமர் மகாதிர் முகமது தலைமையிலான அமைச்சரவையில் இணைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து