முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ராமநாதபுரத்தில் ரத்ததான முகாம்

புதன்கிழமை, 23 மே 2018      விருதுநகர்
Image Unavailable

ராமநாதபுரம்,-இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் ராமநாதபுரத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை மற்றும் ராமநாதபுரம் ராஜெம் மோட்டார்ஸ் ஹீரோ சார்பாக ரத்த தான முகாம் ராஜெம் மோட்டார்ஸ் ஹீரோ அரங்கில்  நடைபெற்றது. பொதுமேலாளர் எஸ்.ராஜ்குமார் வரவேற்றார். ரத்த தான முகாமினை ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் தலைமையில் ராஜெம் மோட்டார்ஸ் உரிமையாளர் எஸ். நல்லமுத்து முன்னிலையில் ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன் துவக்கி வைத்தார். ராஜெம் மோட்டார்ஸ் ஹீரோ அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சாலைப்பாதுகாப்பின் அவசியம் மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல் பற்றி புரவலர் எம்.தேவி உலகராஜ்  விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து ரத்த தானம் செய்து வரும் ஆர். காவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தமிழ்மாறன் ரத்த தானத்தின் அவசியம் குறித்து உரையாற்றினார்.
    ராமநாதபுரம் அரசு தலமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் கே.எஸ்.விநாயகமூர்த்தி மற்றும் அவரது  குழுவினர் ராஜெம் மோட்டார்ஸ் ஊழியர்கள் 30 கொடையாளர்களிடம் ரத்தம் சேகரித்தனர். மனித வள மேம்பாட்டு அலுவலர் செல்வி வி. சென்மலர் நன்றி கூறினார். ரெட் கிராஸ் ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் எஸ். அய்யப்பன், ராஜம் கார்ஸ் பொது மேலாளர் வு. குணசேகரன் ஆகியோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து