முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரமோஸ் ஏவுகணை 2-வது நாளாக சோதனை

புதன்கிழமை, 23 மே 2018      இந்தியா
Image Unavailable

புவனேஷ்வர் : பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை தொடர்ந்து 2-வது நாளாக வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

ஒடிஸா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் இந்த ஏவுகணை சோதனை  செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணிக்கு நடைபெற்றது. மொபைல் லாஞ்சர் கருவியில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, தனது இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தது. பிரமோஸ் ஏவுகணையானது, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), ரஷியாவின் என்பிஒஎம் அமைப்பு ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்டது. அது ஒளியைக் காட்டிலும் 3 மடங்கு அதிக வேகமாக பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது ஆகும். உலகில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஏவுகணைகளில் மிக வேகமாக சென்று தாக்குதல் நடத்தும் திறனுடைய ஏவுகணைகளில் இதுவும் ஒன்றாகும்.

முன்னதாக, ஒடிஸாவின் பாலசோர் மாவட்டத்தில் பிரமோஸ் ஏவுகணை திங்கள்கிழமையும் சோதித்து பார்க்கப்பட்டது. அதையடுத்து 2-வது முறையாக செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தப்பட்டுள்ளது. 2 முறையும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை நடத்திய விஞ்ஞானிகளுக்கு டிஆர்டிஒ தலைவர் கிறிஸ்டோபர் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து