முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபா வைரஸ் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலேசானைக்கூட்டம்

புதன்கிழமை, 23 மே 2018      தேனி
Image Unavailable

தேனி- கேரள மாநிலத்தில் நிபா (Niphய ஏசைரள) வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ள செய்தியினை தொடர்ந்து தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் காணொளிக் காட்சி வாயிலாக அறிவுரைகள் வழங்கினார்கள்.
அதனைத்தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நிபா (Niphய ஏசைரள) வைரஸ் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை, வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறை மற்றும் பிறதுறை, உள்ளாட்சித்துறை அலுவலர்களுடனான ஆலேசானைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், கேரள மாநிலத்திலிருந்து தேனி மாவட்டத்திற்கு வருவதற்கு முக்கியமான பாதைகளான குமுளி, போடி மெட்டு, கம்பம் மெட்டு, ஆகிய வழித்தடங்களில் யாரும் காய்ச்சல் அறிகுறிகளுடன் வருகின்றார்களா என்பதை கண்காணித்திட சுழற்சி முறையில் அலுவலர்களை நியமித்து கண்காணித்திடவும், நிபா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தேவையான மருந்துகளையும் முன்னெச்சரிக்கை கருவிகளையும் தயார் நிலையில் வைத்திடவும், வெளவால்கள் கடித்த பழங்கள், பன்றிகள் மூலமாகவும் நிபா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புள்ளதால் பன்றி வளர்ப்பவர்;கள் மற்றும் பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொது சுகாதார நிலையினை  மேம்படுத்திடவும்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், கேரள மாநிலத்தில் நிபா (Niphய ஏசைரள) வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ள செய்தியினை தொடர்ந்து தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்புகள் ஏற்படாமல் முற்றிலும் தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  நிபா வைரஸ்  குறித்து பொதுமக்கள் தேவையற்ற பீதி அடையவோ, அச்சம் கொள்ளவோ வேண்டாம். பொதுமக்கள் எந்த வகையான காய்ச்சல் என்றாலும் முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதுடன் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற வேண்டும்.
மேலும், பொதுமக்கள் அவ்வப்போது கைகளை கழுவியும், பழங்களை சுத்தமான நீர் அல்லது சுடு தண்ணீரில் கழுவி உட்கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களை சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் பராமரித்திட வேண்டும். நமது மாவட்டம் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால்  நிபா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடடிவக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் அரசுத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் நிபா வைரஸினை நமது மாவட்டத்தில் வராமல் தடுத்திட முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்   தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர்  கௌதமன்,   அவர்கள், மேகமலை வன உயிரினக்காப்பாளர்  .கலாநிதி,  மாவட்ட வருவாய் அலுவலர்  .ச.கந்தசாமி  , தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.திருநாவுக்கரசு அவர்கள், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) (பொ) மரு.சக்திவேல் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சண்முகசுந்தரம்   கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் மரு.அன்பழகன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து