மாநிலத்தில் முதலிடம் பெற்றுத் தந்த மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி கல்வித்துறைக்கும் கலெக்டர் லதா பாராட்டு

10 exam result photo  23

 சிவகங்கை, -சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித்தலைவர் தி .லதா, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
        தமிழகத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட சிவகங்கை மற்றும் தேவகோட்டை கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 18,837 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 18,555 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றதன் மூலம் 98.50சதம்   தேர்ச்சி பெற்று மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது என்பது சிவகங்கை மாவட்டத்திற்கு கிடைத்த மிக பெருமை வாய்ந்த நிகழ்வாகவும் இன்றைய தினம் சிவகங்கை மாவட்டத்திற்கு ஒரு பொன்னாளாகும். கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் 10ம் வகுப்பு தேர்ச்சியில் மாநில அளவில் 8ம் இடம் பெற்றது. நடப்பாண்டில் மாணவ, மாணவியர்களின் கடின உழைப்பாலும் அதற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முயற்சியாலும் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த வெற்றியை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பெறுகின்ற வகையில் அலுவலர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டும். அதேபோல் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்விலும் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற சிறப்புடன் செயல்பட வேண்டும்.
        10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை பொறுத்த வரை 183 பள்ளிகள் 100மூ  தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்கள். இதேபோல் மாவட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பெருமை தேடித்தருகின்ற வகையில் தேர்ச்சி சதவீதம் இருந்திட வேண்டும். அதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாணவ, மாணவியர்களுக்கும,; பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தததுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்கள் ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.க.லதா,இ.ஆ.ப.,அவர்கள் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து