முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி: பலவேறு இன நாய்கள் பங்கேற்பு

புதன்கிழமை, 23 மே 2018      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்- - கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி நடந்தது.
 கொடைக்கானலில் கடந்த 19ம் தேதி கோடை விழா தொடங்கியது. இந்த கோடைவிழாவினை ஒட்டி பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடை பெற்று வருகின்றது. கோடை விழாவின் ஒரு பகுதியாக சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் நிகழ்ச்சியாக நாய்கள் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடந்தது. தமிழ்நாடு கால் நடை பராமறிப்புத் துறை சார்பில் நடந்த இந்த நாய்கள் கண்காட்சியில் 19 வகையினை சேர்ந்த 54 நாய்கள் கலந்து கொண்டன.
 இதில் செயிண்ட் பெர்ணார்டு, ஜெர்மன் செப்பர்டு, ராட்வீலர், பீகில்ஸ், சைபீரியன் ஹஸ்கி, ஸ்பிட்ச், டாபர்மேன், லேப்ரடார், பக் உள்ளிட்ட வகைகளைச் சேர்ந்த நாய்கள் கலந்து கொண்டன.
 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. நாய்களின் இனத்தின் குணாதிசயம், கீழ்படிதல், பராமரிப்பு ஆகியவற்றில் சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
 எ.பிரிவில் சுரேசின் ஜெர்மன் செப்பர்டு நாய்க்கும், பி. பிரிவில் வினோத்தின் ஜெர்மன் செப்பர்டு வகை குட்டி நாய்க்கும், சி.பிரிவில் ராஜேசின் ராட்வீலர் இன நாய்க்கும், டி. பிரிவில் அருண்பிரகாசின் லேப்ரடார் நாய்க்கும், இ.பிரிவில் காவியாவின் பீகில்ஸ் இன நாய்க்கும், எப். பிரிவில் வெங்கடேசின் பக் இன நாய்க்கும், ஜி. பிரிவில் கால்வினின் கலப்பு இன நாய்க்கும் முதல் பரிசு வழங்கப்பட்டது. ஒட்டு மொத்த சாம்பியனாக டோம்னிக்கின் செயின்ட் பெர்னார்டு இன நாய் தேர்வு செய்யப்பட்டது.
 பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மன்னவனூ மத்திய ஆடுகள் ஆராய்ச்சி நிலைய டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கொடைக்கானல் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் டாக்டர் ஹக்கீம் முன்னிலை வகித்தார். கொடைக்கானல் தாசில்தார் பாஸ்யம், கால் நடை துறை கோழிப்பண்ணை உதவி இயக்குநர் சத்தியநாராயணன், கால் நடை டாக்டர்கள் சங்கரவினாயகம், அருண், செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நாய்கள் கண்காட்சியினை சுற்றுலா பயணகள் ஏராளமானோர் கண்டு களித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து