முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பழனிசாமியுடன் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆலோசனை

புதன்கிழமை, 23 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தூத்துக்குடியில் நிலைமை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரனை தலைமை செயலகத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் பொதுமக்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

தூத்துக்குடியில் நிலைமை பதட்டமாக உள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். இதைதொடர்ந்து மேலும் 2 ஆயிரம் போலீசார் மதுரை உள்பட பக்கத்து மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி நேற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரனை தலைமை செயலகத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

இதில் மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், உள்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் அமைதி திரும்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றும் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலியானார். அண்ணாநகர் பகுதியில் இச்சம்பவம் நடந்தது. நேற்றும் போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சில வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்நிலையில், 144 தடை உத்தரவை 25-ம் தேதி வரை நீட்டித்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து