முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் டிரம்ப்-கிம் சந்திப்பு ஜூன் 12-ல் திட்டமிட்டபடி நடைபெறும்: அமெரிக்கா

வியாழக்கிழமை, 24 மே 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் இடையேயான சந்திப்பு திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதி நடைபெறும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாஷிங்டனில் அமெரிக்க நாடாளுமன்றக் குழு (வெளியுறவுத் துறை விவகாரம்) முன்பு ஆஜராகி அவர் கூறியதாவது, வடகொரியாவை அணுஆயுதத்தை கைவிடச் செய்வதை, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு முதன்மையான விவகாரங்களில் ஒன்றாக டிரம்ப் நிர்வாகம் கருதுகிறது. ராஜ்ய ரீதியில் கொடுக்கப்பட்ட அதிகபட்ச நிர்ப்பந்தங்கள், பொருளாதார தடைகள் ஆகியவைகளினால், டிரம்ப் - கிம் இடையேயான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஜூன் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.

கொரிய தீபகற்பம் அணுஆயுதமில்லாத பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா தெளிவாக உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதில் சரியான ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டிய பொறுப்பை எங்களிடம் அமெரிக்க மக்கள் அளித்துள்ளனர். அதன்படி, சரியான ஒப்பந்தத்தை நாங்கள் செய்யாவிட்டால், பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவோம் என்றார்.

தன்னிச்சையாக அணுஆயுதத்தை கைவிடும்படி கூறினால், டிரம்ப் - கிம்  சந்திப்பு நடக்காது என வடகொரியா கடந்த வாரம் எச்சரித்திருந்தது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து கூறிய போது, அணுஆயுத விவகாரத்தில் சீனாவின் தூண்டுதலால் வடகொரியா கடுமையான நிலைப்பாட்டை தற்போது எடுத்துள்ளது; ஆதலால் கிம் ஜாங் உன்-வுடனான சந்திப்பு நடப்பது சந்தேகம்தான் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், ஜூன் மாதம் 12-ம் தேதி இந்த சந்திப்பு நடக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து