முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷாங்காய் அமைப்பில் இந்தியா - பாகிஸ்தான்: ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்கிறார் சீன அதிபர்

வியாழக்கிழமை, 24 மே 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் இடம் பெற்றிருப்பது இரு நாடுகளிடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஷி ஜின்பிங் பேசியதாவது:
பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று தீமைகளை எதிர்த்து போராடுவதே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முக்கிய நோக்கமாகும். கடந்த ஆண்டு பாகிஸ்தானும், இந்தியாவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் புதிய உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பும், நம்பிக்கையும் அதிகரிக்கும். இது சர்வதேச அளவிலும் பல்வேறு பலன்களை அளிக்கும்.
நமது கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தமக்குள் நல்லுறவையும், ஒத்துழைப்பையும் அதிகப்படுத்த வேண்டும்.
அப்போதுதான் சர்வதேச அளவில் நமது அமைப்பு வலுப் பெற்றதாகக் திகழும். உறுப்பு நாடுகளுடன் அனைத்து விஷயங்களிலும் இணைந்து செயல்பட சீனா மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது என்றார்.

இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் ராஜேந்தர் கன்னா, பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நசீர் கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் மாநாடு சீனாவில் ஜூன் 9, 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து