முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சி என்பது எதிரிக் கட்சியாக இருக்கக் கூடாது: மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

வியாழக்கிழமை, 24 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: எதிர்க்கட்சி என்பது எதிரிக்கட்சியாக இருக்கக் கூடாது. தூத்துக்குடி மக்களை தமிழக அரசின் சார்பில் நாங்கள் நிச்சயம் சந்திப்போம் என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சி.பா.ஆதித்தனாரின் 37-வது ஆண்டு நினைவு நாளான நேற்று எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி: தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதே?

பதில்: தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் இணையதள சேவை முடக்கம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ அதன்படி தமிழக அரசு செயல்படும்.

தூத்துக்குடி மக்களை சந்திப்போம்
கேள்வி: தூத்துக்குடி மக்களை தமிழக அரசின் சார்பில் யாரும் இன்னும் சந்திக்கவில்லையே?

பதில்: மக்களோடு எப்போதும் நாங்கள் (தமிழக அரசு) இருக்கிறோம். தூத்துக்குடி மக்களை நிச்சயம் நாங்கள் சந்திப்போம்.

கேள்வி: தூத்துக்குடி மாவட்டத்திற்கு துணை ராணுவம் வரவழைக்கப்பட்டால் தனி தமிழ்நாடு கோரிக்கை வலுக்கும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியிருக்கிறாரே?

பதில்: இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு. வைகோ தனி தமிழ்நாடு கோரிக்கை எழுப்புவது குறித்து இந்திய அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.

கேள்வி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது குறித்து.?

பதில்: தூத்துக்குடி சம்பவம் தமிழக அரசு வேதனைப்படக்கூடிய ஒன்றாகும். எல்லோரும் சகோதர, சகோதரிகளாய் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் ஆக்கப்பூர்வமான யோசனைகளுடன் ஏதும் பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்வதுதான் ஒரு எதிர்க்கட்சியின் பண்பாடாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சி என்பது எதிரிக்கட்சியாக இருக்கக் கூடாது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு

மின்சாரம் துண்டிப்பு

கேள்வி: ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுமா?

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2013-ம் ஆண்டிலேயே உத்தரவிட்டார். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த ஆலையின் உரிமத்தைப் புதுப்பிக்கவும் தமிழக அரசு அனுமதி தரவில்லை. ஆலை தற்போது இயங்கவில்லை. அதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு தொடரப்பட்டுள்ளது. ஆலைக்கு மின்சாரத்தைத் துண்டித்து விட்டோம். மக்களின் உணர்வு தான் எங்களின் உணர்வு. மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு அரசின் அனுமதி கிடையாது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து