முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி எங்கள் சவாலையும் ஏற்க வேண்டும் ராகுல், தேஜஸ்வி வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 24 மே 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: விராட் கோலியின் உடற்தகுதி சவாலை ஏற்றுக் கொண்ட மோடி, எங்களின் சவாலையும் ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவும் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தனது உடற்தகுதியை நிருபிக்கும் வகையில், உடற்பயிற்சி செய்து டுவிட்டரில் வீடியோ வெளியிட்டார். இதே போல் விராட் கோலி, சாய்னா நேவால், சல்மான்கான் ஆகியோரும் உடற் தகுதியை நிரூபிக்க முடியுமா என அவர் சவால் விடுத்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த விராட் கோலி, தன்னுடைய உடற்தகுதியை நிரூபிக்கும் விதமாக உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு பிரதமர் மோடி உடற்தகுதியை நிரூபிக்க முடியுமா? எனச் சவால் விடுத்து இருந்தார். விராட் கோலியின் இந்த சவாலை ஏற்பதாகக் கூறி பிரதமர் மோடியும் டுவீட் செய்து இருந்தார்.

பிரதமர் மோடியின் டுவீட்டைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுலும்,  லல்லுவின் மகன் தேஜஸ்வி யாதவும் தங்களுடைய சவாலையும் மோடி ஏற்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து ராகுல் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, அன்புள்ள பிரதமரே, விராட் கோலியின் உடற்தகுதி சவாலை நீங்கள் ஏற்றுக் கொண்டதைப் பார்த்தேன். என்னிடமும் ஒரு சவால் இருக்கிறது. இதையும் ஏற்றுக் கொள்ளுங்கள். பெட்ரோல், டீசல் விலையைக் குறையுங்கள். இல்லாவிட்டால், காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும். உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு ராகுல் பதிவிட்டுள்ளார்.

இதே போல் லல்லுவின் மகனும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில், விராட் கோலியிடம் இருந்து வந்த சவாலை நீங்கள் ஏற்றுக் கொண்டதை நாங்கள் எதிர்க்கவில்லை. நாங்கள் விடுக்கும் சவாலையும் ஏற்றுக் கொள்ளுங்கள் எனக் கேட்கிறோம். வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்குக வேலை கொடுங்கள், விவசாயிகள் கடன் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும், தலித்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராக வன்முறையை ஒடுக்க வேண்டும், இந்தச் சவால்களை எல்லாம் ஏற்றுக்கொள்கிறீர்களா? மோடி சார். இவ்வாறு தேஜஸ்வி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து