முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் டுவிட்டரை பின்தொடர்பவர்களை பிளாக் செய்ய தடை: நீதிமன்றம் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 25 மே 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க், டுவிட்டரில் பின்தொடர்பவர்களை பிளாக் செய்யக்கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டுவிட்டர் சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்பை 5 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இதில் டிரம்பை கடுமையாக விமர்சிப்பவர்கள் பிளாக் செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் டிரம்பை பின்தொடர முடியாது. அவர்களின் கருத்துகள் முற்றிலும் மறைக்கப்படும்.

இதை எதிர்த்து நியூயார்க் நீதிமன்றத்தில் 7 பேர் வழக்கு தொடர்ந்தனர். இதனை நீதிபதி நவோமி ரீஸ் பக்வால்ட் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

தனி நபர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் யாரை வேண்டுமானாலும் பிளாக் செய்யலாம். ஆனால் அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கத்தை அமெரிக்க அரசு நிர்வகித்து வருகிறது. இதில் அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். எதிர்மறை கருத்து கூறுபவர்களை பிளாக் செய்வது சட்டவிரோதம். இது அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். அதிபரும் சட்டத்துக்கு உட்பட்டவரே. அவரது டுவிட்டர் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைப்போரை பிளாக் செய்யக் கூடாது.

இவ்வாறு நீதிபதி கண்டிப்புடன் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து