முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலாலம்பூர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணைதான்: பன்னாட்டு விசாரணையில் அம்பலம்

வெள்ளிக்கிழமை, 25 மே 2018      உலகம்
Image Unavailable

பனிக் (நெதர்லாந்து), ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தை நடுவானில் சுட்டு வீழ்த்தி 298 அப்பாவி மக்கள் பலியான விவகாரத்தில் ரஷ்ய ஏவுகணைதான் காரணம் என்று விசாரணை தரப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்த விரிவான வீடியோ பகுப்பாய்வு அம்பலப்படுத்துவது என்னவெனில் எம்.எச்.17 மலேசிய பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஏவுகணை ரஷ்யாவின் ராணுவ யூனிட்டிலிருந்து செலுத்தப்பட்டதே என்பது தெரிய வந்துள்ளதாக பன்னாட்டு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.  நெதர்லாந்து நேஷனல் போலீஸ் வில்பர்ட் பாலிஸன் கூறிய போது, ரஷ்ய நகரான கர்ஸ்கிலிருந்து 53வது போர்விமானத் தாக்கு ஏவுகணைப் படை 53-ம் பிரிவிலிருந்துதான் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

ஜூலை 17, 2014, அன்று உலகை உலுக்கிய இந்தச் சம்பவத்தில் கிழக்கு உக்ரைன் வானில் இந்த பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணித்த 298 அப்பாவி உயிர்களும் பலியாகின. ரஷ்யா தங்கள் ஏவுகணை அல்ல என்று தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் பன்னாட்டு விசாரணை நேற்று விரிவான வீடியோ ஆய்வில் ரஷ்ய ஏவுகணைதான் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து