முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை தொடரிலிருந்து பாதியில் வெளியேறினார் டி சில்வா

வெள்ளிக்கிழமை, 25 மே 2018      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் தனஞ்செயா டி சில்வாவின் தந்தையை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதையடுத்து, அவர் மேற்கிந்தியத்தீவுகள் தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்.

மேற்கிந்தியத்தீவுகள் நாட்டுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதற்காக இலங்கை அணியினர் மேற்கியத்தீவுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். இரு அணிகளும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. பர்படாஸ் நகரில் ஒருபோட்டி இரவு பகல் ஆட்டமாக நடைபெறுகிறது. முதல் போட்டி ஜுன் 6-ம் தேதி டிரினிடாட்டில் நடக்கிறது.

இலங்கை அணியில் இடம் பெற்ற ஆல்ரவுண்டர் தனஞ்செயா டி சில்வா. இவரின் தந்தை ராஜன். இலங்கையில் கட்சி ஒன்றில் முக்கியப் பதவியில் இருக்கிறார். கொழும்பு நகரின் ரத்மலானா பகுதியில் ராஜன் காரில் சென்ற போது மர்மநபர்கள் அவரை சுட்டுக்கொலை செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜன் இறந்த செய்தி அவரின் மகனும், இலங்கை வீரருமான தனஞ்செயாவுக்கு கிரிக்கெட் வாரியம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மேற்கிந்தியத்தீவுகள் தொடரில் பங்கேற்காமல் பாதியில் தனஞ்செயா நாடு திரும்புகிறார். இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் அமைப்பின் தலைவர் திலங்கா சுமதிபாலா கூறுகையில், இந்த நெருக்கடியான நேரத்தில் தனஞ்செயாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கை கிரிக்கெட் அமைப்பு வழங்கும். தந்தையை இழந்து வாடும் தனஞ்செயாவுக்கு வாரியம் சார்பில் அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம். அவர் விரைவில் நாடு திரும்ப தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள எனத் தெரிவித்தார்.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்னே விரலில் எலும்பு முறிவு காரணமாக அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. இப்போது டி சில்வாவும் பாதியிலேயே திரும்பியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும். இலங்கை அணியுடானான தொடரை வலுவாக எதிர்கொள்ளும் வகையில் மேற்கிந்தியத்தீவுகள் அணியில் டேவான் ஸ்மித், விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் ஜாமர் ஹேமில்டன், ஷான் டோரிச், சுனில் அம்பரீஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து