முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 25 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தென் மேற்கு பருவ மழை அந்தமான் - நிகோபார் பகுதிகளில் தொடங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். வரும்  30- ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், கத்திரி வெயிலில் வாடி வரும் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை அறிவித்தார். அப்போது, அந்தமான் - நிகோபார் பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியிருப்பதாகக் கூறினார். மேலும், 48 மணி நேரத்தில் தென் மேற்கு பருவ மழை தெற்கு அரபிக் கடலின் சில பகுதிகள், குமரி, மாலத்தீவு பகுதிகளில் துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

தென்மேற்கு பருவ மழை தொடங்குவதையொட்டி குமரி, கேரளா, லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும். அதே சமயம், இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் கன்னியாகுமரி, கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பகுதிகளில் வரும்  30-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

தமிழக வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அதிகபட்சமாக திருவையாறில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து