முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் குற்றச்சாட்டு: ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி கைது

சனிக்கிழமை, 26 மே 2018      சினிமா
Image Unavailable

நியூயார்க்: பல்வேறு பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில், பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டெய்ன் (66) கைது செய்யப்பட்டார்.

நூற்றுக்கணக்கான திரைப்படங்களை தயாரித்து புகழ் பெற்றவர் ஹார்வி வெயின்ஸ்டெய்ன். இவர் மீது நடிகை லூசியா இவான்சின், கடந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், தம்மை ஹார்வி பல ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறியிருந்தார்.

இதையடுத்து, ஹாலிவுட் நடிகைகள், இயக்குநர்கள் என 75-க்கும் மேற்பட்ட பெண்கள், ஹார்வி மீது பல்வேறு காவல் நிலையங்களில் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இது, அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நியூயார்க் நகர காவல் நிலையத்தில் ஹார்வி சரணடைந்தார். போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து