முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாரியின் திருமணத்திற்கு செல்ல வேண்டுமென தாயிடம் அடம் பிடித்து அழும் சிறுமியின் வீடியோ

சனிக்கிழமை, 26 மே 2018      உலகம்
Image Unavailable

லண்டன்: இளவரசர் ஹாரியின் திருமணத்திற்கு தானும் போக வேண்டும் என ஐந்து வயது சிறுமி அழுகின்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்தவாரம் இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மெகன் மார்க்லே திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், தன்னை ஏன் இளவரசர் ஹாரி அவரது திருமணத்திற்கு அழைக்கவில்லை என லோலா என்ற ஐந்து வயது சிறுமி கதறி அழும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், சிறுமி லோலா, தானும் ஹாரி திருமணத்திற்கு செல்ல வேண்டும் எனக் கேட்கிறாள். அதற்கு அவரது தாய், நாமெல்லாம் அந்தத் திருமணத்திற்கு போக இயலாது. நமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பதிலளிக்கிறார். இதனைக் கேட்ட லோரா கதறி அழுகிறார்.

ஹாரியின் திருமணத்தையொட்டி லோராவின் பள்ளியில் தேனீர் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான அழைப்பிதழை தவறுதலாக ஹாரியின் திருமணத்தில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ் என அச்சிறுமி புரிந்து கொள்கிறாள். இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தினால் அச்சிறுமி அழுகிறாள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து