முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி அரசின் 4 ஆண்டு கால சாதனை: ரிப்போர்ட் கார்டு வெளியிட்டு ராகுல் விமர்சனம்

சனிக்கிழமை, 26 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்று நேற்றுடன் 4 வருடம் நிறைவடைந்த நிலையில், பா.ஜ.க சார்பில் அரசின் சாதனைகளை முன்னிறுத்தி பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,4 வருட ரிப்போர்ட் கார்ட் என குறிப்பிட்டு, விவசாயம், வெளிநாட்டு கொள்கை, எரிபொருள் விலை, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவற்றை குறிப்பிட்டு இதில் எல்லாம் பெயில் என கூறியுள்ளார்.

அதேநேரம், கோஷங்களை உருவாக்குவது, சுய விளம்பரம் ஆகியவற்றில் இந்த அரசுக்கு ஏ பிளஸ் எனப்படும் உச்சபட்ச கிரேடை வழங்கியுள்ளார். யோகாவில் பி நெகட்டிவ் என கூறி கிண்டல் செய்துள்ளார். மொத்தத்தில் இந்த ஆட்சி குறித்த கருத்து என குறிப்பிட்டு, தகவல் தொடர்பில் மாஸ்டர் என்றும், சிக்கலான விவகாரங்களில் தடுமாறி வருவதாகவும், கவன குவிப்பில் மோசம் என்றும் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து