முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காடுவெட்டி குரு மறைவுக்கு இ.பி.எஸ்- ஓபிஎஸ் இரங்கல்

சனிக்கிழமை, 26 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: காடுவெட்டி குரு மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்,

இது குறித்து அ.தி.மு.க ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், பா.ம.க முன்னணித் தலைவரும் வன்னியர் சங்கத்தின் தலைவருமான காடுவெட்டி ஜெ.குரு உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம், அன்புச் சகோதரர் காடுவெட்டி குரு 2001 ஆம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும் 2011 ஆம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. காடுவெட்டி குருவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் பா.ம.க.வினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து