முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை

சனிக்கிழமை, 26 மே 2018      உலகம்
Image Unavailable

ஜம்மு: எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இதனால், தீவிரவாதிகளின் ஊருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

கடந்த வாரம் முதல், ரம்ஜான் விழாவிற்காக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும் வகையில் எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினா் நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. ஜம்மு-காஷ்மீரில் எல்லைக்கு அப்பால் இருந்து இந்திய நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர், அடிக்கடி அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தந்தார் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேரை இந்திய ராணுவத்தினர் நேற்று காலை சுட்டுக் கொன்றனர். இருதரப்பினருக்கும் இடையே சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. மேலும் தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளது என்பதால் தாங்தார் கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள வனப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கை முன்னேற்றம் எடுப்பதற்காக ராணுவத் தளபதிகளின் தலைமைப் பொறுப்பாளரான பிபின் ராவத் பாகிஸ்தான் தீவிரவாத ஊடுருவலை நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிபின் ராவத் கூறுகையில், எல்லைகளுக்குள் நாங்கள் சமாதானத்தை தான் விரும்புகிறோம். ஆனால், பாகிஸ்தான் தொடர்ச்சியாக போர் மற்றும் எங்களின் உடைமைகளை இழக்கச் செய்யும் வகையில் யுத்த வீதிகளை மீறுகிறது என்பதை அறிந்திருப்பதுடன், அத்தகைய சூழ்நிலைகள் நிகழும் போது பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
மேலும் அப்பாவி மக்களின் உயிர்களைப் பாதுகாக்க பயங்கரவாதத்திற்கு எதிராக எதிர் தாக்குதலும் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து