முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுடன் கூட்டணி அமைக்கிறது அமெரிக்கா முன்னாள் அதிபர் முஷாரப் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுடன் கூட்டணி அமைக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் தெரிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்காவிலுள்ள வாய்ஸ் ஆப் அமெரிக்கா வானொலிக்கு முஷாரப் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் - அமெரிக்கா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, இருதரப்பு உறவு மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. எனவே பிரச்சினைகள் குறித்து அமெரிக்காவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

பனிப்போர் காலத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா வெளிப்படையாக ஆதரவு அளித்தது. தற்போது மீண்டும் ஆதரவு அளிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுடன் கூட்டணி சேரும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இது பாகிஸ்தானை நேரடியாக பாதிக்கும்.

ஆப்கானிஸ்தானில் இந்தியா ஆற்றிவரும் பங்களிப்பு குறித்து விசாரிக்கும்படி ஐ.நா.வை பாகிஸ்தான் கேட்டுக் கொள்ள வேண்டும். இதில் பிரச்சினையை ஒருதரப்பாக அணுகினால், எதிர்மறை விளைவுதான் ஏற்படும். பாகிஸ்தான் அதிபராக நான் இருந்த போது, பாகிஸ்தான் - இந்தியா இடையேயான உறவில் புத்துணர்வு ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.

இந்தியா அணுஆயுதத்தை உருவாக்கியதால், பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால்தான், பாகிஸ்தானும் அணுஆயுதத்தை உருவாக்கியது. ஆனால், அணுஆயுத விவகாரத்தில் இந்தியாவை கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு எந்த நாடும் வலியுறுத்தவில்லை என்றார் முஷாரப்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து