முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 20 லட்சத்துக்கு ஏலம் போன முலாம்பழங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2018      உலகம்
Image Unavailable

டோக்கியோ: ஜப்பானில் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படும் இரண்டு யூபாரி முலாம் பழங்கள் 32 லட்சம் யென்னுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 லட்சம்) ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

ஜப்பானின் யூபாரி நகரில் விளைவிக்கப்படும் தரம் வாய்ந்த முலாம் பழங்கள், அந்த நாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்றவை.

நீண்ட காலம் சேமித்து வைக்கப்படும் மது வகைகளைப் போல, இந்தப் பழங்களை வாங்குவதும் ஆடம்பரத்தின் அடையாளமாக அந்த நாட்டில் கருதப்படுகிறது. இதன் காரணமாக, இந்த வகைப் பழங்கள் ஏலத்துக்கு வரும் போது அதனை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு போட்டா போட்டி நடக்கும்.

இந்த நிலையில், யூபாரி நகரையொட்டிய ஜப்பானின் ஐந்தாவது பெரிய நகரமான சப்போரோவில் இரண்டு யூபாரி முலாம்பழங்களைக் கொண்ட தொகுதி ஏலத்துக்கு விடப்பட்டது. இந்த இரு பழங்களையும் வாங்குவதற்கு பலர் போட்டியிட்ட நிலையில், அதிகப்பட்சமாக 32 லட்சம் யென்னுக்கு அந்தப் பழங்களை ஒருவர் வாங்கியுள்ளார்.

இது, யூபாரி முலாம் பழங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டதிலேயே மிகவும் கூடுதல் விலையாகும். இதற்கு முன்னர், கடந்த 2016-ம் ஆண்டில் 30 லட்சம் யென்னுக்கு இரு யூபாரி முலாம்பழங்கள் வாங்கப்பட்டதே சாதனை அளவாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து