முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் நிபா வைரஸ் கம்பம் சோதனைச் சாவடியில் சிறப்பு மருத்துவ முகாம்.

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2018      தேனி
Image Unavailable

கம்பம்,மே - கேரளாவில் நிபா வைரஸ் பரவுவதால் தமிழக எல்லையில் உள்ள கம்பம் சோதனைச் சாவடியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.கேரளா மாநிலம் கோழிக்கோடு,மலப்புரம் மாவட்டங்களில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிலர் இறந்தனர்.காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி புனே தேசிய ஆய்வு கூடத்தில் ஆய்வு செய்த போது இந்த காய்ச்சலுக்கு நிபா என்ற கொடிய வைரஸ் காரணம் என்பது தெரிய வந்தது.ஆனால் நிபா வைரஸ் பற்றிய அறிகுறிகள் இதுவரை தென் பட வில்லை.தேனி மாவட்டம் கம்பம் கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.இங்கு விவசாயத்திற்கு அடுத்த படியாக ரெடி மேடு ஆடை உற்பத்தி மாடு வியபாரம் நடைபெறுவதால் கோட்டயம்,எர்ணாகுளம்,கொச்சி,திருவனந்தபுரம்,மற்றும் கம்பம் அருகே உள்ள இடுக்கி மாவட்டம் கம்பம் மெட்டு,நெடுங்கண்டம்,து£க்குப்பாலம்,வண்டிப்பெரியார்,குட்டிக்கானம்,ஏலப்பாறை,பாம்பனார் மற்றும் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியபாரிகள் கம்பம் வந்து செல்கின்றனர்.மேலும் தினந் தோறும் நடைபெறும் உழவர் சந்தை,வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் வாரச் சந்தை கேரள பொதுமக்கள் மற்றும் வியபாரிகள் அதிகளவில் கம்பம் வந்து செல்கின்றனர்.இதனால் நிபா வைரஸ் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.இதையடுத்து கம்பம்&கம்பம்மெட்டு சாலை போலீஸ் சோதனை சாவடி இருந்த இடத்தில் நிபா வைரஸ் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் முருகன் தலைமையில் செவிலியர்கள்,சுகாதார ஆய்வாளர்கள் வாகனங்களில் வருபவர்களிடம் காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்கின்றனர்.இதே போல் உத்தமபாளையம் தாசில்தார் பாலசண்முகம் தலைமையில்  கம்பம் நகராட்சி ஆணையாளர் ந.சங்கரன்,க.புதுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆண்டவர் ஆகியோர் கேரள மாநிலத்தில் இருந்து வரும் பஸ், லாரி,ஜீப்,கார் போன்ற வாகனங்களின் எண் முகவரி மற்றும் உரிமையாளர்களின் செல் போன் எண்களை பதிவு செய்தனர்.கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்ட பின்பே தமிழகப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றன.மேலும் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து அடிக்கப்படுகிறது.நிபா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் கேரளாவிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக கேரளா சுற்றுலாத் துறை அதிகாரிகள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து