முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து பைக்குகளிலும் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியாது பவுலர்கள் குறித்து தோனி கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை: ஐ.பி.எல் 2018 அதன் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. இரு தென்னக அணிகள் இறுதியில் மோதுகின்றன. ஒன்று இந்திய வீரர் கேப்டனான சி.எஸ்.கே மற்றொன்று நியூஸிலாந்து வீரரான கேன் வில்லியம்சன் கேப்டனாக இருக்கும் சன் ரைசர்ஸ் ஐதராபாத். இறுதிப் போட்டியை அடுத்து டோனி பவுலர்களைப் பயன்படுத்துவது குறித்து கூறியதாவது:

என் வீட்டில் நிறைய கார்களும், பைக்குகளும் உள்ளன. ஒரே நேரத்தில் அனைத்திலும் பயணிக்க முடியாது. ஒரு அணியில் 6-7 பவுலர்கள் இருக்கும் போது நிலைமைகள் என்ன, யார் பேட்டிங் செய்கிறார்கள், அந்த நேரத்தில் தேவைப்படுவது என்ன? இவற்றை நான் அணியின் சிறந்த நலன்களுக்காகப் பார்த்தே பந்து வீச்சு அளிக்கிறேன்.

சூழ்நிலைகளுக்கு ஏற்ப யார் அந்தத் தருணத்தில் பேட்ஸ்மெனை வீழ்த்த முடியும் என்று நான் கருதுகிறேனோ அவர்களுக்கு பவுலிங் கொடுக்கிறேன். உதாரணமாக கடந்த போட்டியில் ஹர்பஜன் சிங்கை கொண்டு வரும் தேவை இருந்ததாக நான் கருதவில்லை. ஆனால் எந்த ஒரு வடிவத்திலும் ஹர்பஜன் ஒரு அனுபவஸ்தர்தான் என்று டோனி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து