முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை 25-ல் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல்

திங்கட்கிழமை, 28 மே 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அடுத்த பொதுத் தேர்தல் வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் இடைக்கால பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில் இந்தத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,

பொதுத் தேர்தல் குறித்து அதிபர் ஹூசைனுக்கு தேர்தல் ஆணையம் இந்த மாதம் 21-ம் தேதி அனுப்பிய கடிதத்தில் ஜூலை மாதம் 25 முதல் 27-ம் தேதிக்குள் பொதுத் தேர்தலை நடத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதில், ஜூலை 25-ம் தேதியை அதிபர் தேர்ந்தெடுத்தார் என்று அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து