முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் சிரியாவில் 35 ராணுவ வீரர்கள் பலி

திங்கட்கிழமை, 28 மே 2018      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ் : சிரியாவில் அரசுக்கு ஆதரவான கூட்டுப் படைகளுக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சண்டையில் 35 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

சிரியாவில் அரசுக்கு ஆதரவான கூட்டுப் படைகளுக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து கடும் சண்டை நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சண்டையில் கூட்டுப்படையினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பில் இருந்த கடைசி நகரையும் கைப்பற்றினர்.

டெய்ர் அல்-சோர் மாகாணத்தில் உள்ள மயாதின் நகரில் சிரியா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 26 பேர் சிரியாவை சேர்ந்தவர்கள் எனவும், 9 பேர் ரஷியாவை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. அதே சமயம் இந்த துப்பாக்கிச் சண்டையில் 43 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பகுதியில் உள்ள அரசு ஆயுதக் கிடங்கை குறிவைத்து சில பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் நான்கு ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து