முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட கொரிய அதிபரை சந்திக்கும் தேதி இடத்தில் மாற்றமில்லை: டிரம்ப்

திங்கட்கிழமை, 28 மே 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : வட கொரிய அதிபர் கிம் ஜோங்கைச் சந்திப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள தேதி மற்றும் இடத்தில் மாற்றம் இல்லை என்று அமெரிக்க அதிபர்  டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம், வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தப் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி சிங்கப்பூரில் வரும் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும் என்ற நம்பிக்கையை அவர் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தலைநகர் வாஷிங்டனில் உள்ள அதிபர் மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது:

சிங்கப்பூரில் ஜூன் 12-ம் தேதி நடைபெறவிருக்கும் வட கொரிய அதிபருடனான சந்திப்பை எதிர் நோக்கியிருக்கிறோம். அந்தச் சந்திப்புக்கான தேதியிலோ, இடத்திலோ எந்த மாற்றமும் இல்லை. சிங்கப்பூர் சந்திப்பு தொடர்பான எல்லா முன்னேற்பாடுகளும் இதுவரை நல்லபடியாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து