முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர் ஏசியா அலுவலகங்களில் சோதனை

செவ்வாய்க்கிழமை, 29 மே 2018      வர்த்தகம்
Image Unavailable

மலேசியா நாட்டின் குறைந்த கட்டண விமானச்சேவை நிறுவனமான ஏர் ஏசியா, பெங்களூரு நகரை தலைமை இடமாக கொண்டு கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் விமானச் சேவையை தொடங்கியது. முதலில் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையில் விமானச் சேவையை தொடங்கிய இந்த நிறுவனத்தின் 49 சதவீதம் பங்குகள் டாட்டா சன்ஸ் நிறுவனத்திடம் உள்ளது.

உள்நாட்டு விமானச் சேவையை தொடர்ந்து வெளிநாட்டு விமானச் சேவைகளையும் தொடங்கியுள்ள ஏர் ஏசியா வெளிநாட்டு விமானச் சேவைக்கான லைசென்ஸ் பெறுவதற்கு முறைகேடான வழிகளை இந்நிறுவனம் பயன்படுத்தியதாக சமீபத்தில் தெரியவந்தது. இதைதொடர்ந்து, ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனர் (சி.இ.ஓ.) மலேசியா நாட்டை சேர்ந்த டோனி பிரான்சிஸ், ஏர் ஏசியா நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.வெங்கடராமன், விமானச்சேவை ஆலோசகர் தீபக் தல்வார் மற்றும் பெயர்கள் வெளியிடப்படாத அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் உள்ள ஏர் ஏசியாவுக்கு சொந்தமான 6 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்ரு சோதனை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து