முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த மாதம் முதல் மீண்டும் போட்டிக்கு திரும்புகின்றனர் வார்னர் - பான்கிராப்ட்

செவ்வாய்க்கிழமை, 29 மே 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைபெற்ற வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் ஜூலை மாதத்தில் இருந்து கிரிக்கெட்டிற்கு திரும்புகிறார்கள்.

தடை விதிப்பு

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப்டவுன் டெஸ்டின்போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. பான்கிராப்ட் இந்த வேலையை செய்வதற்கு வார்னர்தான் முக்கிய காரணம் என்பதும், இது ஸ்மித்திற்கு தெரியும் என்பதும் வெட்ட வெளிச்சமானது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும், பான்கிராப்டிற்கு 9 மாதமும் தடைவிதிக்கப்பட்டது. சர்வதேச போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டாலும், வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடரிலும், உள்ளூர் தொடரிலும் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.

டி-20 - ஒருநாள் போட்டி...

அதன்படி வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் ஜூலை மாதம் கிரிக்கெட்டிற்கு திரும்புகிறார்கள். ஜூலை 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை டார்வினில் நான்கு அணிகள் பங்கேற்கும் என்டி ஸ்டிரைக் லீக் தொடர் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணிகளும் தலா 8 டி20 போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. இதில் வார்னர் 21-ம் தேதி மற்றும் 22-ம் தேதிகளில் நடைபெறும் 50 ஓவர் ஒருநாள் போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பான்கிராப்ட் தொடர் முழுவதும் விளையாடுகிறார். ஸ்மித் ஜூன் 28-ம் தேதியில் இருந்து ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறும் குளோபல் டி20 கனடா தொடரில் விளையாட இருக்கிறார். இந்தகான வீரர்கள் ஏலம் வரைவு பட்டியலில் வார்னர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து