பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கேரள அரசு முடிவு

புதன்கிழமை, 30 மே 2018      வர்த்தகம்
Petrol price1(N)

தொடர்ந்து 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்தது. இந்நிலையில் 16 நாட்களுக்கு பின்னர் நேற்று பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டது. சென்னையில் வெறும் ஒரு பைசா விலை குறைக்கப்பட்ட பெட்ரோல் லிட்டருக்கு 81.42 ரூபாய்க்கு நேற்று விற்பனையானது. டீசலும் ஒரு பைசா விலை குறைக்கப்பட்டு 73.17 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை ஒரு ரூபாய் குறைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் குறைக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து