உள்ளூர் விமான டிக்கெட் கட்டணம் உயர்வு

புதன்கிழமை, 30 மே 2018      வர்த்தகம்
Indigo flight 2017 11 13

பெட்ரோல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. அதை சமாளிக்க ‘இண்டிகோ’ விமான நிறுவனம் உள்ளூர் பயணிகள் விமான டிக்கெட் கட்டணத்தை  உயர்த்தியுள்ளது. அதன்படி 1000 கி.மீட்டர் தூரத்திற்குள் பயணம் செய்பவர்களுக்கான கட்டணம் ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1000 கி.மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்வோருக்கு ரூ.400 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இது குறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எண்ணெய் விலை சீரடைந்ததும் டிக்கெட் கட்டண உயர்வு வாபஸ் பெறப்படும்” என அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து