முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் விபத்து தடுப்பு விழிப்புணர்வு முகாம்.

புதன்கிழமை, 30 மே 2018      தேனி
Image Unavailable

கம்பம்,- கம்பம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுனர்களுக்கான சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு தடுப்பு முகாம் நடைபெற்றது.தேனி மாவட்டம் கம்பம் அரசு போக்குவரத்துக் கழகம் கிளை 1 பணிமனையில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.தேனி கோட்ட மேலாளர் பாண்டியராஜன் விபத்து குறித்தும் ஓட்டுனர்களின் கவனக் குறைவால் ஏற்படும் விபத்துகளால் போக்குவரத்துத் துறைக்கு ஏற்படும்  இழப்பு குறித்தும் பேசினார் கம்பம் கிளை 1 மேலாளர் மணி உறுதி மொழியை வாசித்தார்.தேனி கோட்ட உதவி மேலாளர் (இயக்கம்) சத்தியமூர்த்தி ஓட்டுநர் நடத்துனர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.நிகழ்ச்சியில் கம்பம் போக்கு வரத்து காவல் நிலைய சப்&இன்ஸ்பெக்டர் கணேசன் திண்டுக்கல் பயிற்சி மைய உதவிப் பொறியாளர் மணிகண்டன்,விபத்து தடுப்புக் குழு உதவி பொறியாளர் உதயகுமார்,திண்டுக்கல் பயிற்சி மைய ஆசிரியர்கள் சுந்தரம்,சோமு,காந்தன் நடத்துனர் பயிற்சி ஆசிரியர்கள் மாரியப்பன்,சூசை மாணிக்கம்,மற்றும் கம்பம் கிளை ஓட்டுனர்கள் நடத்துனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து