முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரை தொடர்ந்து 15 நாடுகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தகவல்

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: சிங்கப்பூரை தொடர்ந்து 15 வெளிநாடுகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் மானியக் கோரிக்கையின் போது இந்திய யூனியன் முஸ்லீம்லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் பேசியதாவது, கடலில் பிடிக்கப்படும் மீன்களில் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்ளுர் மக்களுக்கும் மீன்கள் கிடைக்கும் வகையில் கடலில் பிடிக்கும் மீன்களில் 50 சதவீதம் உள்நாட்டில் விற்பனை செய்ய வேண்டும். பால்வளத்துறையின் மூலம் பால் பொருட்கள், ஆவின் பால் போன்றவற்றை வெளிநாடுகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போது குறுக்கிட்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கடல் உணவுப் பொருட்களின் மூலம் அதிகளவில் வருமானம் கிடைத்து வருகிறது. மீன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் மீனவர்களுக்கும் வருவாய் கிடைக்கிறது. இதனை தடை செய்ய வேண்டும் என உறுப்பினர் கருதுகிறாரா? மனிதர்கள் அனைவருக்கும் புரதச் சத்து இன்றியமையாதது. மனிதனுக்கு புரதம் 100 சதவீதம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று பேசினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தமிழகத்தில் பால் கொள்முதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உள்நாட்டு சந்தையின் தேவை மட்டுமின்றி வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் தேவையை மனதில் கொண்டு ஆவின் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஆவின் பால் விற்பனை செய்ய ஏற்றுமதி முகவர் நியமிக்கப்பட்டு கடந்த 25.11.2017 அன்று சிங்கப்பூரில் ஒரு லிட்டர் ஆவின் டெட்ரோ பேக்பால் அறிமுகம் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் ஆவின் டெட்ரா பேக் அறிமுகம் செய்த பின்னர், தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில் இருந்து ஆவின் பால் பொருட்களை இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்து விபரங்களை கேட்டு வருகின்றனர். ஆவின் பால் பொருட்களை மலேசியா, ஹாங்காங், ஐக்கிய அரபு, அமீரகம், பிரிட்டன், பக்ரெயின், குவைத், சவுதி அரேபியா, இலங்கை, ஓமன், கத்தார் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தேவையான நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த 15 நாடுகளுக்கு ஏற்றுமதி முகவர்கள் நியமிக்கப்பட்டு அந்த நாடுகளில் ஆவின் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆவின் ஏற்றுமதியை ஒரு கொள்கையாக கடைபிடித்து நடப்பு ஆண்டு இறுதிக்குள் ஆவின் பால், பால் பொருட்கள் குறைந்தது 15 நாடுகளில் ஏற்றுமதி செய்யப்படும்.

மேலும் மகராஷ்டிராவில் உள்ள தமிழர்களுக்கு ஆவின் பால், பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். ராஜஸ்தான், டெல்லி, அசாம், அருணாசலபிரதேசம், மணிப்பூர், மிசோரம், சிக்கிம், நாகலாந்து, திரிபுரா, மேகாலயா, பீகார், மத்தியபிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், அரியானா, அந்தமான் நிகோபார், ஒடிஷா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆவின் மொத்த விற்பனையாளர்கள் நியமிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் மகராஷ்டிராவிலும் முகவர் நியமிக்கப்பட்டு அங்கு வாழும் தமிழர்கள் மட்டும் அல்லாமல் அனைவருக்கும் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து