முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்பு வாரிய சொத்துகள் 100 சதவீதம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் உதயகுமார் தகவல்

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் மானியக் கோரிக்கையின் போது இந்திய யூனியன் முஸ்லீம்லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் பேசியதாவது,

சான்றிதழ் பெறுவதில்...
காயல்பட்டினத்தில் சினிமா தியேட்டர், மதுக்கடை, காவல்நிலையம் இதுவரை இல்லை. அங்கு சுமார் 40 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தற்பொழுது காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. அதனை அப்புறப்படுத்த வேண்டும். கடைய நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டு விழாவினை கொண்டாட உள்ளது. அங்கு கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது. எனவே புதுப்பித்து தந்து 100 ஆண்டு விழாவை கொண்டாட வேண்டும்.தமிழகக்தில் படித்து விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் குழந்தைகள் அங்கு சென்று படிப்பதற்கான மைக்ரேஷன் சான்றிதழ் பெறுவதில் சிரமம் உள்ளது. எனவே அதனை எளித்தாக்கி சரி செய்ய வேண்டும்.

முஸ்லீம்களுக்கான 3.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டினை தனி ஒதுக்கீடாக மாற்றி தர வேண்டும். முஸ்லீம் இட ஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். வக்பு வாரிய சொத்துகளை பூஜியம் மதிப்பாக வைத்து யாரும் பதிவு செய்ய முடியாத நிலையை உருவாக்க வேண்டும். வக்பு வாரியத்திற்கு தலைமை அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என பேசினார்.

சொத்துகள் மீட்கப்படும்...
அப்போது பேசிய அமைச்சர் நிலோபர்கபில், வக்பு வாரிய சொத்துகளை பாதுகாக்க மாவட்ட அளவில் கமிட்டி அமைக்கப்பட்டு சொத்துகள் மீட்கப்படும். தலைமை அதிகாரி நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயகுமார், வக்பு வாரிய சொத்துகளை பூஜியம் மதிப்பில் வைத்து, யாரும் பதிவு செய்ய முடியாத நிலையில் உள்ளது. வக்பு வாரிய சொத்துகள் வருவாய்த்துறை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் 23 மாவட்டங்களில் துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது. அவை நூறு சதவிகிதம் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து