முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை கூறி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ராமநாதபுரம் சிறுமி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் ஒவ்வொரு பொருட்களின் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை கூறி பள்ளி சிறுமி இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
    ராமநாதபுரம் சிகில்ராஜவீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். வெளிநாட்டில் மெரைன் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி ராஜராஜேஸ்வரி. இவர்களின் மகன் தமிழினி(வயது4). ராமநாதபுரம் நேசனல் அகாடமி பள்ளியில் யூ.கே.ஜி.படித்து வருகிறார். இவர் இதற்கு முன்னர் உலக பிரபலங்களின் புகைப்படங்களை பார்த்து அடையாளம் கண்டு பெயரை சொல்லும் சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்தில் 69 பேரின் பெயர்களை கூறி சிறுமி தமிழினி இந்த சாதனையை படைத்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது சிறுமி தமிழினி ஒரு நிமிடத்தில் உலக கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை கூறி சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் நேசனல் அகாடமி பள்ளியில் இந்திய சாதனை புத்தக பிரதிநிதி விவேக்ராஜா முன்னிலையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி, துணை முதல்வர் சங்கரலிங்கம் ஆகியோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
    இதில் சிறுமி தமிழினி ஒரு நிமிடத்தில் 54 கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை கூறி புதிய சாதனை படைத்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். ஒவ்வொரு பொருட்களின் பெயர்களையும் கூறியவுடன் அதனை கண்டுபிடித்தவர்களின் பெயர்களை உடனுக்குடன் கூறி சிறுமி இந்த சாதனையை படைத்தார். இதனை தொடர்ந்து அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை இந்திய சாதனை புத்தக பிரதிநிதி விவேக்ராஜா வழங்கி பாராட்டினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து