முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொரிஷியஸ் கடல் பகுதியில் தொடர்பை இழந்தது விமானம் பரபரப்புக்கு மத்தியில் தென்னாப்பிரிக்கா சென்றார் சுஷ்மா

திங்கட்கிழமை, 4 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்ற விமானம் 14 நிமிடங்கள் தொடர்பை இழந்ததால் பதற்றம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து மொரிஷியஸ் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்துடன் விமான தொடர்பு கிடைத்தது. அதன் பிறகு மொரிஷியஸ் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. அங்கு அதிகாரிகளை சந்தித்த சுஷ்மா, திட்டமிட்டபடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்.

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் கூட்டத்தில் பங்கேற்க வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஐ.எப்.சி. 31 ரக விமானத்தில் புறப்பட்டார். மதியம் 2 மணியளவில் அவரது விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. தென்னாப்பிரிக்கா செல்லும் வழியில் மொரிஷியஸ் நாட்டில் அதிகாரிகளை சந்திக்க சுஷ்மா ஸ்வராஜ் திட்டமிட்டிருந்தார். அதன்படி விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வான் எல்லையை தாண்டியது. இதை சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு மையம் உறுதி செய்தது. அதன்பின், மொரிஷியஸ் கடல் பகுதிக்குள் நுழைந்த நிலையில் மாலை 4.44 மணிக்கு மொரிஷியஸ் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்துடன் விமானம் தொடர்பை இழந்தது.

இதனால் மொரிஷியஸ் அதிகாரிகள் பதட்டம் அடைந்தனர். உடனடியாக டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தந்தனர். வழக்கமாக கடல் பகுதிக்கு மேல் விமானம் செல்லும் போது, எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனில் அந்த பிராந்தியத்தில் உள்ள விமான நிலையக் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் 30 நிமிடங்கள் வரை காத்திருப்பார்கள். ஆனால், மொரிஷியஸ் அதிகாரிகள், 14 நிமிடங்கள் தொடர்பு கிடைக்காத நிலையில், எச்சரிக்கை மணியை அழுத்தி விட்டனர். இதனால் பதட்டம் அதிகரித்தது.

அதன் பின், திருவனந்தபுரம், டெல்லி, சென்னை, மொரிஷியஸ் அதிகாரிகள் விமானத்தின் நிலையை அறிய தொடர்ந்து முயற்சி மேற்கொண்டனர். பிறகு 4.58 மணிக்கு மொரிஷியஸ் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்துடன் விமான தொடர்பு கிடைத்தது. அதன் பிறகுதான் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பிறகு திட்டமிட்டபடி மொரிஷியஸ் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. அங்கு அதிகாரிகளை சந்தித்த சுஷ்மா, திட்டமிட்டபடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து