முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் : இந்திய வானிலை மையம் தகவல்

திங்கட்கிழமை, 4 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம்...

நாட்டின் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கினாலும் பல பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. அதேநேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வட மாநிலங்களில்  அவ்வப்போது பலத்த புழுதி புயலும் வீசி வருகிறது. 

இந்நிலையில் தமிழகம் உட்பட பல மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பலத்த காற்றுடன் ...

மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உ.பி., உத்தரகண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், வித்ர்பா, கொங்கன் மற்றும் கோவா, மத்திய மகராஷ்ட்ரா, தமிழ்நாடு, தெலுங்கானா, உள் கர்நாடகா மற்றும் கடலோர ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னல், மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என தெவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் நிக்கோபர் தீவுகள், அசாம், மேகாலயா, நாகாலந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, தெலுங்கானா, ராயலசீமா, கடலோர ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. வட மற்றும் மத்திய மாநிலங்கள், மற்றும் மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளில் வெப்பத்துடன் வறண்ட வானிலை நிலவும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மிகக்குறைந்தளவு...

இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி இந்த பருவமழை காலத்தில் மத்திய இந்திய மாநிலங்கள் இயல்பான மழையை பெறும். கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இயல்புக்கும் குறைவான மழையை பெறும். வட கிழக்கு இந்திய மாநிலங்கள் மிகக்குறைந்தளவு மழையை பெறும்.

இயல்பான அளவு...

நாடு முழுவதும் மாதாந்திர மழைப்பொழிவு ஜூலை மாதத்தில் 101 சதவீதமாக இருக்கும். ஆகஸ்டு மாதத்தில் 94 சதவீதமாக இருக்கும். இரு மாதங்களும் 9 சதவீத மழையளவை கூட்டியோ அல்லா குறைத்தோ பெறும். 90 சதவீதம் முதல் 96 சதவீதம் வரையிலான மழையளவு இயல்பை விட குறைவாகவும், 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரையிலான மழையளவு இயல்பான அளவு என்றும் கூறப்படுகிறது. 110 சதவீத மழை இயல்பை விட அதிகமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து