முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10 வரை தடை நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஜூலை 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதில் ரூ.3,500 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதில் முன்னாள் அமைச்சர் சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத் துறை அதுதொடர்பாக விசாரித்து வருகிறது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திடமும் அமலாக்க துறை விசாரணை நடத்தியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் சி.பி.ஐ. தன்னை கைது செய்ய தடை விதிக்கக் கோரி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் கடந்த வாரம் முறையிட்டிருந்தார். அதனை ஏற்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி, ஜூன் 5-ம் தேதி வரை சிதம்பரத்துக்கு எதிராக கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க அமலாக்க துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு நேற்று சிதம்பரத்துக்கு அமலாக்க இயக்குநரகம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

இந்நிலையில், சிதம்பரம் கோரியிருந்த முன் ஜாமீன் மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஜூலை 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து