முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா மின்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை: அலுவல் விஷயமாக மும்பை சென்ற கோவா மின்துறை அமைச்சர் பாண்டுரங் மட்கைகர் நெஞ்சுவலி காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வட கோவாவில் உள்ள கும்பார்ஜூவா தொகுதி எம்.எல்.ஏ.வான பாண்டுரங் நேற்று முன்தினம் மதியம் மும்பை சென்றார். அங்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இது குறித்து கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே கூறுகையில், அமைச்சர் பாண்டுரங் நெஞ்சுவலி காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறு விவரங்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து