முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளாஸ்டிக் பயன்பாட்டினை நூறு சதவீதம் தவிர்;க்க ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- பிளாஸ்டிக் பயன்பாட்டினை நூறுசதவீதம் தவிர்க்க வேண்டும் என்று உலக சுற்றுச்சூழல்த pனத்தில் ராமநாதபுரம் கலெக்டர் முனைவர்நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், அரியமான் கடற்கரை பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த பல்வேறு விழிப்புணர்வு பணிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் துவக்கி வைத்து பங்கேற்றார். உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்திடவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும்  1972ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஜூன் 5-ஆம் நாள் உலக சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களான அரியமான் கடற்கரையில் தமிழ்நாடு வனத்துறையின் சார்பாகவும், ராமேஸ்வரம் விவேகானந்தா வித்யாலயா சார்பாகவும்,   ஹேண்ட் இன் ஹேண்ட் என்ற தொண்டு நிறுவனம் சார்பாகவும் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையேற்று, விழிப்புணர்வு பணிகளைத் துவக்கி பள்ளி மாணவ, மாணவியர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முதலாவதாக தமிழ்நாடு வனத்துறையின் சார்;பாக  அரியமான் கடற்கரைப் பகுதிகளில் பெருங்கன்று நடும் திட்டத்தினை துவக்கி வைத்து, அதிகளவில் மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகளை மரக்கன்று நட்டு வைத்து துவக்கி வைத்தார்.  மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும் என்பதை வலியுறுத்திடும் வகையில் அரியமான் கடற்கரை பகுதியில் சுற்றுப்புற தூய்மைப்படுத்தும் பணிகளை துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவியர்களை ஒன்றிணைத்து கடற்கரையில் சுற்றுப்புற தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார்.
  அதன் தொடர்ச்சியாக ராமேஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில்  ஹேண்ட் இன் ஹேண்ட்  தொண்டு நிறுவனம் சார்பாக நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் விழாவில் மாணவ மாணவியர்களிடத்தில் உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில், கடைகளுக்கு செல்லும் போதும், அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பண்டங்கள் ஆகியவற்றை வாங்கிடும் போதும் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவ, மாணவியர்களுக்கு துணிப் பைகளை வழங்கினார்.  அதேபோல அதிகளவில் மரக்கன்றுகளை நடுவதற்கு மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்திடும் விதமாக மரக்கன்றுகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- மாவட்டத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2017-2018ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பாக சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை நடும் திட்டத்தின் கீழ் 40,0000 மரக்கன்றுகளும், அரசு நிலங்கள் மற்றம் தனியார் வசம் விலையில்லாமல் மரக்கன்றுகள் வழங்கி பராமரிக்கப்படுமு; வீதத்தில் மொத்தம் 2,56,000 மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.  அதேபோல வனத்துறையின் மூலம் பெருங்கன்று மரம் நடும் திட்டத்தின் கீழ் 16,200 மரக்கன்றுகளும், தனியார் வசம் விலையில்லாமல் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பராமரிக்கப்படும் வீதத்தில் 35,000 மரக்கன்றுகளும், 25,0000 பனைமர விதைகளும் நடவு செய்யப்பட்டுள்ளது. 
 ராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு மகிழ ஆண்டுதோறும் ஏறத்தாழ இரண்டு கோடி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  அதனடிப்படையில் இத்தகைய சுற்றுலா தளங்களில் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக இன்றைய தினம் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.  அதேபோல இராமேஸ்வரத்தினை மிகச் சிறந்த சுற்றுலா தளமாக உருவாக்கிடும் வகையில் ஒளி ஒலி காட்சிகள் அமைத்தல், ராமாயண சுற்றுத்தொடர் பணிகள் என ரூ.30.93 கோடி மதிப்பில் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு பணிகள்  செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாடு என்ற உயரிய நோக்கத்தில்  ஜனவரி 2019  முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் தவிர தடிமன் வேறுபாடின்றி இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அறிவித்துள்ளார்கள்.  அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நூறு சதவீதம்  பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழித்திடும் வகையில்  பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  பொதுமக்கள் சுற்றுப்புறத்தினை மேம்படுத்திடும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினைத் தவிர்த்து அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்திட வேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்;சியில்;  மாவட்ட வனஉயிரின பாதுகாவலர்  டி.கே.அசோக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, வனத்துறை ரேஞ்சர்கள் ஞானப்பழம், நவீன்குமார், ரகுவரன், சிக்கந்தர் பாட்ஷா உள்பட அரசு அலுவலர்கள், ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து