முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் திருக்கோவிலில் மத்திய பாதுகாப்புபடை உயர் அதிகாரிகள் ஆய்வு.

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- ராமேசுவரம்  திருக்கோவிலில் பாதுகாப்பு குறித்து மத்திய பாதுகாப்புபடையின்  உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுருத்தல் உள்ளது.இதனை தொடர்ந்து ராமேசுவரம் திருக்கோவிலை சுற்றி பாதுகாப்பு கருதி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வாகனங்கள் செல்ல போலீஸார்கள் தடை விதித்தனர்.தொடர்ந்து திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களை போலீஸாரின் சோதணைக்கு பின்னரே  அனுமதித்து வருகின்றனர்.இந்த நிலையில் திருக்கோவில் முழுவதையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வர மத்திய பாதுகாப்புதுறையினர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக அவ்வொப்போது  மத்திய பாதுகாப்புபடை அதிகாரிகள் திருக்கோயிலி்ல் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வந்தனர்.இந்நிலையில் திருக்கோவிலில் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்துவதற்காக மத்திய பாதுகாப்புதுறையின் கண்காணிப்பாளர் மேஜர் ஜெகநாதன் தலைமையில் 4 பேர் கொண்டு பாதுகாப்பு போலீஸார் குழுவினர் திருக்கோவிலுக்கு நேற்று வருகை தந்தனர்.பின்னர் இவர்கள் ராமேசுவரம் மத்திய உளவுப்பிரிவு போலீஸார்கள் மற்றும் ராமேசுவரம் கோவில் காவல் நிலைய போலீஸார்கள் மற்றும் திருக்கோவில்  பொறியியல் பிரிவு அலுவலர்கள் ஆகியோர்களுடன் திருக்கோவிலின் உள்பகுதிக்கு சென்றனர்.பின்னர் திருக்கோவில் மூன்றாம் பிரகாரம்,ராமநாதசுவாமி,பர்வதவர்ததினி அம்மன் சன்னதி மற்றும் இராண்டாம் பிரகாரம் ஆகிய பகுதிகளையும்,திருக்கோவிலின் மேல்தளத்திற்கு சென்று ராஜகோபுரம் மற்றும் இதர கோபுரங்களை பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தினர்.இந்த ஆய்வின்போது திருக்கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி ,கோட்ட பொறியாளர் மயில்வாகணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து