முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சுற்றுசூழல் தினத்ததை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை விருதுநகர் கலெக்டர் சிவஞானம், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2018      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர் - விருதுநகர் மாவட்டம், விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் உலக சுற்றுசூழுல் தினம் 2018ஐ முன்னிட்டு பிளாஸ்டிக்  மாசுபாடுகளை முறியடிப்போம்  என்பதை கருப்பொருளாக கொண்டு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து நடத்திய வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட   பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்;க்கும் வகையிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் இன்று(05.06.18) கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவித்தாவது:-
 உலக சுற்றுச்சூழல் நாள் ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜீன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.
  நாம் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்;த்து சுற்றுசூழல் மாசு இல்லாத ஒரு தூய்மையான தமிழகத்தை உருவாக்குவோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம் தெரிவித்தார்கள்.
 இந்த பேரணியில் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி, ~த்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டி.பி.என்.எம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏ.எஸ்.பி.சி.சி நகரவை உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சார்ந்த சுமார் 250 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பேரணியில் மாணவ,மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அட்ஙகிய பதாதைகளை ஏந்தி கொண்டு புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி விருதுநகர் முக்கிய வீதிகள் வழியாக  ~த்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது. மேலும், நான் என்னால் முடிந்தவரை (பழைய) பொருட்களை மீண்டும் பயன்படுத்துவேன், நான் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன், நான் உற்பத்தி செய்யும் கழிவுகளை கட்டுப்படுத்துதல், நான் அதகிமான அளிவில் மரங்களை நடுவேன், நான் எரிசகதி மற்றும் தண்ணீரை பேணிக்காப்பேன் என்ற பசுமை உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் எடுத்துக்கொண்டனர்.
 இப்பேரணியில் மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் மு.விஜயலட்சுமி, உதவி பொறியாளர்கள் சந்திரசேகர், கணேஷ், மாவட்ட சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் .ராஜா உட்பட மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து