முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது எதனால்? பொன். ராதாகிருஷ்ணன் கருத்து

புதன்கிழமை, 6 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: மாணவர்களின் நலன் கருதியே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

பொய் பிரச்சாரம்
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக மாணவி மரணம் அடைந்தது மிகுந்த மனவேதனை அளிக்கிறது; இரண்டாண்டு முன்பே நீட்டுக்கு பயிற்சி அளித்திருக்க வேண்டும். தமிழகத்தில் சுயநல அரசியலுக்காக நீட் தேர்வை காரணம் காட்டி பொய்யான பிரச்சாரத்தை பரப்பி வருகின்றனர். எந்த துறையில் படித்தாலும் முன்னேற முடியும் என மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழை பிழைப்பாய் வைத்து பொய் பிரச்சாரம் செய்வதை நிறுத்தவேண்டும்; தமிழை தாயாக நினைக்கவேண்டும்.

நலன் கருதியே நீட் தேர்வு
தமிழகம் மட்டுமல்ல குஜராத்திலும் நீட் தேர்வை வேண்டாம் என்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வு திணிப்பது போல் சொல்வது  தவறு.  மாணவர்களின் நலன் கருதியே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து